பொதுத்துறை நிறுவனங்களில் முறைகேடுகளையும், நிர்வாகத் திறமையின்மையும் சரிசெய்யாமல் கட்டணங்களை மட்டும் உயர்த்தினால், அது ஓட்டை வாளியில் தண்ணீர் பிடிப்பதற்கு ஒப்பாகவே அமையும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் தேவையற்ற மானியங்கள் அதிகரித்து விட்டன. ரூபாய் 4000 மானியம் உள்ளிட்ட அரசின் பல உதவிகள் வருமானவரி செலுத்தும் பணக்காரர்களுக்கும் வழங்கப்படுகின்றன. இதற்குக் காரணம் தமிழக மக்களின் பொருளாதார நிலை குறித்த விவரங்கள் இல்லாதது தான் அந்த தகவல்களைத் திரட்டி இத்தகைய உதவிகள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்று நிதியமைச்சர் கூறியிருப்பது, வெளிப்படையான, வரவேற்கத்தக்க பேச்சு என அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரத்தில் வெள்ளை அறிக்கையை பார்க்கும் போது, மின்கட்டணம், பேருந்து கட்டணம், சொத்துவரி உள்ளிட்ட அனைத்தும் உயர்த்தப்படுமோ? என்ற பதற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் அன்புமணி தெரவித்துள்ளார்.