அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுரப்பா மீதான முறைகேடு புகார்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு, தனது விசாரணை அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளது.
சுமார் 250 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு செய்ததாக எழுந்த புகார் குறித்து விசாரிக்க கடந்த ஆண்டு அக்டோபரில் அமைக்கப்பட்ட இந்த குழு, நேரடியாகவும், இணையதளம் மூலமாகவும் புகாரளித்தவர்களை நேரில் அழைத்து விசாரணை நடத்தியது.
அதேபோல அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள், பதிவாளர் உள்ளிட்டோரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். கடந்த ஏப்ரல் மாதம் குற்றச்சாட்டுக்கு ஆளான சுரப்பாவிடமும் விளக்கம் கேட்டு பெறப்பட்ட நிலையில், விசாரணை அறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.