சிவகங்கை மாவட்டம், கீழடி அடுத்துள்ள அகரம் அகழாய்வு தளத்தில் 2600 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கீழடி, அகரம் , மணலூர், கொந்தகை ஆகிய நான்கு இடங்களில் தொல்பழங்கால தமிழர்களின் வாழ்வியல் அடையாளங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அழகிய வேலைப்பாடுடன் கூடிய உறைகிணறு ஒன்று அகரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து அப்பகுதியில் ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது.