ஓசூர் அருகே கர்நாடகா மாநில எல்லையில் லாரியில் கொண்டு சென்ற 6 கோடி ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காஞ்சிபுரத்திலிருந்து செல்போன்களை ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரியை மடக்கி 15 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
அதே பாணியில் காஞ்சிபுரத்தில் இருந்து பெங்களூரு நோக்கி சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்களை ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரியை கர்நாடக எல்லையான தேவராயசமுத்ரா என்ற இடத்தில் மடக்கிய மர்ம கும்பல், ஓட்டுநரையும் உதவியாளரையும் தாக்கிவிட்டு செல்போன்களை கொள்ளையடித்துச் சென்றதாகக் சொல்லப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கர்நாடக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.