பேருந்து நிலையங்களில் அமைக்கப்பட்ட தாய்மார்கள் பாலூட்டும் அறைகள் சீரமைக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை மேற்கு மாம்பலம் பொது சுகாதார மைய மருத்துவமனையில் இதய அறுவை மருத்துவக் கருவியை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடக்கி வைத்தார்.
டிசம்பர் இறுதிக்குள் ஒரு கோடிப் பயனாளிகளைக் கண்டறிந்து நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோய்க்கான மருந்துகள் அவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மேற்கு மாம்பலம் மருத்துவமனைக்கு ஒரு மாத ஊதியத்தை நன்கொடையாக அளிப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியனும், தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியும் தெரிவித்தனர்.