தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கலில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மற்றும் கடலோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். 7, 8 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம் மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும். சென்னையில் நகரில் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் 5 நாட்களுக்கு அங்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, வங்கக் கடல் பகுதிக்கு செல்லும் மீனவர்களும் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.