திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் வடமாநில இளைஞர்கள் கொள்ளையடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
ஆரணி டவுன் அவுசிங்போர்டு பகுதியில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பாண்டியன், ஆசிரியர் கமலக்கண்ணன் மற்றும் செல்வி ஆகியோரது வீட்டில் ஆட்கள் இல்லை என்பதை அறிந்து சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்து நகை பணத்தை திருடியுள்ளனர்.
86 சவரன் தங்கைநகைகள், ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள், 62 ஆயிரம் ரொக்கப்பணம் திருடப்பட்டுள்ளது. புகாரின் பேரில் கைரேகை நிபுனர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் தடயங்களை சேகரித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.