செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

இறக்குமதி சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கோரி வழக்கு -நடிகர் தனுஷ்க்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

Aug 05, 2021 11:35:25 AM

றக்குமதி செய்த ரோல்ஸ்ராய்ஸ் சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு வழக்கு தொடர்ந்த நடிகர் தனுசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் ரோல்ஸ் ராய்ஸ் காரை இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்தார். இந்த காருக்கு நுழைவு வரியாக சுமார் 60 லட்சம் ரூபாய் செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டது. அந்த தொகையில் 50 சதவீதத்தை செலுத்திய தனுஷ், பிறகு நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவில் தான் ஒரு நடிகர் என ஏன் தனுஷ் குறிப்பிடவில்லை? என நீதிபதி எழுப்பினார். தான் ஒரு நடிகர் என்பதை மறைத்தது குறித்து தனுஷ் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார். அப்போது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்கும் மனுவை திரும்ப பெறுவதாக தனுஷ் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ஒரு சோப்பு வாங்கும் சாமானியரும், விலை ஏற்றம் காரணமாக வெறும் 50 ரூபாய்க்கு பெட்ரோல் போடும் சாமானியரும் கூட வரி செலுத்தி வருவதாக கூறினார். அதற்கு திங்கட் கிழமைக்குள் நுழைவு வரி பாக்கியை செலுத்த தயார் என தனுஷ் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

இதனை மனுவாக தாக்கல் செய்ய தனுஷ் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இன்று பிற்பகல் 2:15 மணிக்குள் நடிகர் தனுஷ் காருக்கான நுழைவு வரி பாக்கி குறித்து வணிக வரித்துறை தெரிவிக்க உத்தரவிட்டு, பிற்பகல் 2:15 மணிக்கு வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி கூறினார்.


Advertisement
கோவா கடல் பகுதியில் விசைப்படகு மீது நீர்மூழ்கி கப்பல் மோதி விபத்து..
வேலூரில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி..
குற்றச் செயல்களில் உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்கிறது - அமைச்சர் சேகர் பாபு
போக்ஸோ வழக்கில் முன்னாள் ராணுவ வீரருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை
இயக்குநர் பா.ரஞ்சித், கானா இசைவாணி மீது புகார்
வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்பட்டு 4 வயது குழந்தை உயிரிழப்பு
ஆந்திர மாநில பக்தர்கள் வந்திருந்த பேருந்தில் ஏறி திருட முயற்சி... போலீசில் பிடித்துக் கொடுத்த பொதுமக்கள்
அமைச்சர் பெரியகருப்பன் மீதான தேர்தல் தகராறு வழக்கை ரத்து செய்தது ஐகோர்ட்
15 இரும்பு சத்து மாத்திரைகளை ஒரே நேரத்தில் உண்ட பள்ளி மாணவன்
கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் வழக்கறிஞர்கள் சாலை மறியல்

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement