செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஆளுமா டீலுமா போலீசிடம் வசமா அகப்பட்டா ஷாலுமா..! போட்டோ சாப்பில் சறுக்கிய முகநூல் மைனர்

Aug 05, 2021 10:29:24 AM

சேலத்தில் முகநூல் காதலனை வரவழைத்து தூங்கிக் கொண்டிருந்த கணவனை கொன்றது ஏன் என்று காதல் கொலையாளியான மனைவி அளித்துள்ள வாக்கு மூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போட்டோ ஷாப்பால் ஏமாந்த முகநூல் மைனர் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

சேலம் அம்மாபேட்டையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வாழை இலைவியாபாரி, மனைவி மற்றும் மனைவியின் முக நூல் காதலனால் கொலை செய்யப்பட்ட நிலையில், மனைவி ஷாலினி மற்றும் திருச்சி துரையூரை சேர்ந்த 23 வயது இளைஞர் காமராஜ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

காதலன் காமராஜால், ஷாலுமா என்று செல்லமாக அழைக்கப்பட்ட ஷாலினி போலீசில் அளித்துள்ள வாக்கு மூலத்தில், தனக்கும் தனது கணவருக்கும் 16 வயது  வித்தியாசம் என்றும் தனது கணவரால் தன்னுடைய ரசனைக்கு ஒத்துழைக்க இயலவில்லை என்றும் தெரிவித்தார். முகநூல், வாட்ஸ் அப், என எந்த ஒரு தகவல் தொழில் நுட்ப விஷயமும் தெரியாமல் இலை கடையையே கதி என்று இருந்ததால் தான் முகநூலில் நண்பர்களை தேடியதாகவும், தனது விருப்பத்துக்கு ஏற்றபடியே 23 வயதான காமராஜ் இருந்ததால் அவரை காதலித்து திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டதாகவும் இடையூறாக இருந்த கணவனை தீர்த்துக்கட்டியதாகவும் போலீசில் சிக்காமல் இருக்க கொள்ளையர்கள் வந்ததாக நாடகமாடியதாகவும் தெரிவித்துள்ளார் ஷாலு..!

இதற்கிடையே முக நூல் காதலன் காமராஜ் போலீசில் அளித்துள்ள வாக்கு மூலத்தில், கணவர் இல்லை என்றால்  நிம்மதியாக இருவரும் வாழலாம் என்று காதலி ஷாலு சொன்னவார்த்தைகளை நம்பி கணவர் பிரபுவை தீர்த்துக்கட்ட முடிவு செய்ததாகவும், அதன்படி அவரது வீட்டுக்கு சென்றதாகவும், கதவை திறந்த ஷாலு, தன்னை வீட்டின் மாடியில் தண்ணீர் தொட்டிக்கு அடியில் யார் கண்ணிலும் படாமல் பதுங்கி இருக்க சொன்னதால் அங்கு இருந்ததாகவும், நள்ளிரவு 11;30 மணி அளவில் கணவன் உறங்கி விட்டதாக செல்போன் மூலம் ஷாலு தகவல் சொன்னதை தொடர்ந்து தான் கீழே சென்றதாக தெரிவித்துள்ளான் காமராஜ்.

வீட்டிற்குள் படுக்கையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பிரபுவின் கால்களை ஷாலு இறுக்கி பிடித்துக் கொள்ள, பிரபுவின் முகத்தில் மிளகாய் பொடி போட்டு துணியால் இறுக்கமாக மூடி தான், அவரது முகத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டதால் அவர்  மூச்சுத்திணறி உயிரிழந்ததாகவும் ஒப்புக் கொண்ட காமராஜ், இந்த சம்பவத்தை கொள்ளையர்கள் செய்தது போல இருக்கவேண்டும் என்பதற்காக பிரபு அணிந்திருந்த தங்க மோதிரத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பியதாக தெரிவித்துள்ளான்.

முக நூலில் வெளியிட்ட புகைபடத்தில் பள பளப்பாக தெரிந்த ஷாலு கைது செய்யப்பட்ட போது டல்லாக உடல் பருமனுடன் காணப்பட்டதால் அது குறித்து அவரிடம் விசாரித்த போது தான் போட்டோஷாப் ஆப் ஒன்றின் மூலம் தன்னை அழகுபடுத்திக் கொண்டதாக தெரிவித்தார். இதனை நம்பித்தான் முகநூலில் 50 பேர் ஷாலும்மாவின் ஆளுமாவாக நட்பு வலையில் சிக்கியுள்ளனர். இதில் ஒரு படி மேலே போய் முக நூலில் இருந்து நேரடி தொடர்பிற்க்கு வந்த துரையூர் மைனர் காமராஜ் கொலை வழக்கில் சிக்கி கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஷாலினியின் விபரீத புத்தியால் அவரது 2 வயது குழந்தை ஆதவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

நிஜமான அன்பை உணராமல், முகநூலில் மூழ்கி , போட்டோஷாப்பை நம்பி காதல் டீலிங் வைத்தால் இறுதியில் என்னமாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு சாட்சியாகி இருக்கின்றது இந்த கொலை சம்பவம்..!  


Advertisement
கல்லூரி பேருந்து சாலையோர மரத்தில் மோதி விபத்து ..
தேனீக்கள் வளர்ப்பது இவ்வளவு சுலபமா..? மாதம் ரூ.50 ஆயிரம் லாபம்..! ஒரு நாள் பயிற்சி தர்ராங்க..
மூடப்படாத குடிநீர் பைப் பள்ளம் - விபத்தில் சிக்கி பச்சிளம் குழந்தை உயிரிழப்பு.
கை கொடுக்கும் காளான் வளர்ப்பு.. வாய்ப்பை வழங்கும் வேளாண் பல்கலை..
மதுரையில் மங்கி குல்லா கொள்ளையர்கள் கைவரிசை - சி.சி.டி.வி காட்சி வெளியீடு
புத்தக வெளியீட்டு விழாவில் விஜயுடன் பங்கேற்பது குறித்து ஆலோசித்து முடிவு - திருமா
விசாரணைக்கு அழைத்த நபர் வர மறுத்ததால் அடித்து,உதைத்த காவலர் இடமாற்றம் ..
8 செ.மீ மழையை தாங்கும் வகையில் வடிகால் அமைப்பு உள்ளன - அமைச்சர் கே.என்.நேரு
பழனி அருகே பேருந்தில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவிகளை மருத்துவமனையில் அனுமதி..
பள்ளி மாணவியை காப்பாற்றிய ஆயுதப்படை காவலர்.!

Advertisement
Posted Nov 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தேனீக்கள் வளர்ப்பது இவ்வளவு சுலபமா..? மாதம் ரூ.50 ஆயிரம் லாபம்..! ஒரு நாள் பயிற்சி தர்ராங்க..

Posted Nov 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கை கொடுக்கும் காளான் வளர்ப்பு.. வாய்ப்பை வழங்கும் வேளாண் பல்கலை..

Posted Nov 05, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

50 கிராம் நகைக்காக மூதாட்டியை கொன்று டிராலியில் அடைத்த குடும்பம்..! நெல்லூர் டூ மீஞ்சூர் ரெயில் திகில்..

Posted Nov 05, 2024 in Big Stories,

மாடியில தொட்டிக் கட்டி“காய்கறி தோட்டம் ”நகரத்து பெண் விவசாயி..! வாங்க நாமும் தோட்டம் அமைக்கலாம்

Posted Nov 05, 2024 in உலகம்,Big Stories,

தேர்தலுக்கு தயாராகும் அமெரிக்கா! உலகின் வித்தியாசமான தேர்தல் முறை அதிபர் தேர்வு நடப்பது எப்படி?


Advertisement