சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் பென்னிக்சின் தாயும் சகோதரியும் இன்று நேரடியாகச் சாட்சியம் அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்கள் ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் இருவரும் காவல்துறையினரின் சித்திரவதையால் கொல்லப்பட்டதாக வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று பென்னிக்ஸ் தாயும், சகோதரியும் நேரடியாக ஆஜராகி நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் சாட்சியம் அளித்தனர். அப்போது இந்த வழக்கில் கைதாகிச் சிறையில் உள்ள 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.