தென்மேற்குப் பருவக்காற்று, வெப்பச்சலனம் ஆகியவற்றால் நீலகிரி, கோவை, சேலம் மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் 2நாட்களுக்கு இலேசான மழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்டு ஆறாம் நாள் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.
ஆகஸ்டு 7, 8 ஆகிய நாட்களில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கன மழையும், பிற மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், அதையொட்டிய உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனக் குறப்பிட்டுள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் ஒருசில பகுதிகளில் இலேசான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.