கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற படகு நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்தது.
சகாய ஆண்டனி என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் நேற்று காலை ஞானசெல்வம் என்பவர் உள்பட 14 பேர் மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று இரவு அவர்கள் கரையை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தபோது, படகில் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறினால் திடீரென தீப்பிடித்தது.
இதனைக் கண்ட போஸ்கோ என்பவரின் படகில் சென்றவர்கள் தீப்பிடித்த படகில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர். காற்று பலமாக வீசியதால் தீப்பிடித்த படகு முற்றிலும் எரிந்து நாசமானது.