தன் மீது அவதூறு பரப்பும் வகையில் குற்றம்சாட்டி, அதிமுகவில் இருந்து நீக்கிவிட்டதாக, புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக புகழேந்தி தாக்கல் செய்த மனுவில், அமமுகவில் இருந்த தான் கடந்த ஆண்டு மீண்டும் அதிமுகவில் இணைந்து கட்சி பணிகளில் ஈடுபட்டதாகவும், எந்த ஒரு காரணம் இல்லாமல் திடீரென கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி, தன்னை கட்சியில் இருந்து நீக்கியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சிறப்பு நீதிமன்றம், ஓ.பி.எசும், இ.பி.எசும், ஆகஸ்ட் 24ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டது.