குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உதகை வந்தடைந்தனர்.
தமிழகத்திற்கு 5 நாள் சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ள குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், இன்று முதல் 3 நாட்களுக்கு உதகையில் தங்கவுள்ளார்.
இந்நிலையில், சென்னையில் இருந்து உதகைக்கு புறப்பட்ட குடியரசு தலைவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழியனுப்பி வைத்த நிலையில், தீட்டுக்கல் ஹெலிக்கப்டர் தளத்திற்கு வந்தடைந்த அவரை ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வரவேற்றார்.
குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரியில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்று 527 ராணுவ அதிகாரிகளுக்கு பட்டயங்களை வழங்கவுள்ள அவர் அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள ராஜ்பவன் மாளிகைக்கு சென்றடைந்தார். குடியரசு தலைவர் வருகையையொட்டி நீலகிரியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.