திண்டுக்கலில் குடிபோதையில் இருந்த நண்பரின் செல்போனை பத்திரமாக எடுத்து தன் பாக்கெட்டில் வைத்த நபரை, திருடன் என எண்ணிய பொதுமக்கள், அவருக்கு தர்ம அடி கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
சாணார்பட்டியைச் சேர்ந்த அம்ஜத்தும், சதீஷும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள். நேற்றிரவு, திண்டுக்கலுக்கு மது அருந்த வந்த இருவரும், வீட்டுக்குச் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்துள்ளனர்.
அம்ஜத் குடிபோதையில் தள்ளாடிய நிலையில், மிதமான போதையில் இருந்த சதீஷ் அவருடைய பாக்கெட்டில் இருந்த செல்போனை தன் பாக்கெட்டில் எடுத்து பத்திரப்படுத்தி வைத்துள்ளார். இதனை திருட்டாக கருதிய பொதுமக்கள் சதீஷை வெளுத்து வாங்கினர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அம்ஜத்திடம் விசாரித்ததை அடுத்து இருவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், அண்ணன் தம்பியாக பழகி வந்ததும் தெரியவந்தது.