அதிக மின்கட்டண புகாரில், கணக்கீட்டாளர் தவறு செய்திருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.
மாதந்தோறும் மின் கணக்கீடு எடுக்கப்படும் என்கிற வாக்குறுதியும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, திமுக ஆட்சியில் மின் தடைகள் ஏற்படுவது போன்ற மாய தோற்றத்தை எதிர்க்கட்சிகள் ஏற்படுத்தி வருவதாகக் குற்றம்சாட்டினார்.
நான்கரை லட்சம் விவசாயிகள் இலவச மின்சாரம் வழங்க காத்திருப்பு பட்டியலில் இருப்பதாக கூறிய அமைச்சர், மின்மிகை எனக் கூறிய கடந்த ஆட்சியில் ஏன் இந்த நான்கரை லட்சம் பேருக்கு மின் இணைப்பு வழங்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.