தேனி மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள மூணாரில் அரசு கலைக் கல்லூரி கட்டிடம் வெடி வைத்து தரைமட்டமாக்கப்பட்டது.
கடந்த 2018 ஆம் ஆண்டு பெய்த கனமழையினால் மூணார் அரசு கலைக் கல்லூரி கட்டிடம் சேதம் அடைந்து மூன்று பெரிய கட்டிடங்கள் முழுவதுமாக நிலச்சரிவில் புதைந்தன. மீதி உள்ள கல்லூரி கட்டிடங்கள் மற்றும் கல்லூரி நூலக கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் இருந்தன.
இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக இங்கு பெய்து வரும் கன மழையின் காரணமாக எஞ்சியுள்ள கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயம் எழுந்தது. இதனை அடுத்து மாவட்ட பேரிடர் மேலாண்மை பரிந்துரைப்படி, ஆட்சியர் உத்தரவின் பேரில் அரசு கலைக்கல்லூரி கட்டிடங்கள் தனியார் நிறுவனம் மூலம் வெடி வைத்து முற்றிலுமாக தகர்க்கப்பட்டது.