முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான நடிகையின் திருமண மோசடி வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடைவிதிக்கக் கோரியும் மணிகண்டன் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்த வித முகந்திரம் இல்லாமல் அவதூறாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மணிகண்டன் தரப்பில் வாதிடப்பட்டது.
இதனை ஏற்க மறுத்துவிட்ட நீதிபதிகள், விசாரணை தொடர்பாக பதிலளிக்க அடையார் காவல்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.