ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாததால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க தேவையில்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த புதிய மனுவில் மருத்துவ ஆக்சிஜன் தயாரிக்க வழங்கப்பட்ட முந்தைய அனுமதியை மேலும் 6 மாதம் நீட்டிக்க கோரியிருந்தது. இந்த மனு நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது ஸ்டெர்லைட் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆஜராகினார். தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்.
தமிழ்நாட்டில் போதுமான ஆக்சிஜன் இருப்பு உள்ளது என்றும், ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாததால் ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்க தேவையில்லை, அதற்கு அனுமதி வழங்கக் கூடாது என வாதிட்டார். இதையடுத்து வழக்கின் விசாரணையை அடுத்த வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம், அதுவரை தற்போதுள்ள நிலை தொடரும் எனத் தெரிவித்துள்ளது.