அனைத்து மருத்துவர்களும் ஊரகப் பகுதிகளில் சில ஆண்டுகள் மருத்துவ சேவையாற்ற முன்வர வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் சார்பில், சிறப்பாக பணியாற்றிய 31 மருத்துவர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விருதுகளை வழங்கி கெளரவித்தார். அப்போது பேசிய அவர், நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் என்ற வள்ளுவரின் வாக்குக்கேற்ப மருத்துவர்களும், தமிழக அரசும் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகள், கிண்டியில் 500 படுக்கைகளுடன் புதிய பல்நோக்கு மருத்துவமனை என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.