மாநிலத்தில் தொழில்வளமும், வேலைவாய்ப்பம் பெருகச் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே ஊனமாஞ்சேரி காவல் உயர் பயிற்சியகத்தில் பயிற்சி முடித்த 86 காவல் துணைக் கண்காணிப்பாளர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் அவர்களுக்குப் பதக்கம், வாள் ஆகியவற்றை வழங்கினார்.
புதிதாக அமைய உள்ள சைபர் பயிற்சிக் கட்டடத்துக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், ஒரு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தாலே தொழில் வளம் சிறந்து வேலைவாய்ப்பு பெருகும் எனத் தெரிவித்தார்.
சைபர் குற்றவாளிகளைக் கண்டறிய அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் உள்ளதுபோன்ற தொழில்நுட்பங்களைக் தமிழக காவல்துறையிலும் பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.