பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்குச் சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்தனர்.
பெண் ஐபிஎஸ் அளித்த புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி முன்னாள் சிறப்பு டிஜிபி மீதும், புகார் அளிக்க விடாமல் தடுத்ததாக அப்போதைய செங்கல்பட்டுக் காவல் கண்காணிப்பாளர் மீதும் விழுப்புரம் சிபிசிஐடி வழக்குப் பதிந்து விசாரித்தது.
பாதிக்கப்பட்ட பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஏப்ரல் மாதம் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இந்நிலையில் விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் சிபிசிஐடி போலீசார் ஆஜராகி, இந்த வழக்குத் தொடர்பாக 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர்.