திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அதிவேகமாக வந்ததால் கட்டுபாட்டை இழந்த இருசக்கர வாகனம் எதிரே வந்த லாரி மீது மோதி இளைஞர் உயிரிழந்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
திருச்சி மாவட்டம் வெங்கூரைச் சேர்ந்த பூபதி என்ற அந்த இளைஞர் தனது பல்சர் பைக்கில் கோவை நோக்கி சென்று கொண்டிருந்தார். பல்லடம் - தாராபுரம் சாலையில் அதிவேகமாக இளைஞர் சென்று கொண்டிருந்த போது, பைக் கட்டுப்பாட்டை இழந்து நிலைத் தடுமாறியது.
வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய இளைஞர், எதிரே வந்து வலது புறமாக திரும்பிக் கொண்டிருந்த லாரியின் முன்பக்க டயரில் மோதி தூக்கி வீசப்பட்டார்.
ஹெல்மெட் அணிந்திருந்த போதும், படுகாயமடைந்த இளைஞரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.