பயிர்க் காப்பீட்டுக் கட்டணத்தில் மத்திய அரசின் பங்களிப்பை முன்பிருந்தபடி திரும்ப மாற்றியமைக்க வேண்டும் என வலியுறுத்திப் பிரதமருக்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், பயிர்க் காப்பீட்டுக் கட்டண மானியத்தில் மத்திய அரசின் பங்கை 49 விழுக்காட்டிலிருந்து, பாசனப் பகுதிகளுக்கு 25 விழுக்காடாகவும், மானாவாரிப் பகுதிகளுக்கு 30 விழுக்காடாகவும் குறைத்து நிர்ணயித்திருப்பதால், மாநில அரசின் பங்கு 239 விழுக்காடு அளவுக்கு அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு, காப்பீட்டுக் கட்டணத்தில் முன்பு இருந்தபடி மத்திய மாநில அரசுகள், விவசாயிகளின் பங்களிப்பை 49:49:2 என்கிற விகிதத்தில் மாற்றியமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.