ஆட்டோக்கள், டாக்சிக்களில் கட்டண மீட்டரை மாற்றியமைப்பதை குற்றமாக பார்க்க வேண்டும் எனவும், பயணிகளிடம் மோசடியாக அதிக கட்டணம் வசூலிக்கப்படக் கூடாது எனவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் பெரும்பாலான ஆட்டோக்கள் மோட்டார் வாகன சட்டத்தை பின்பற்றுவதில்லை எனக் கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், கட்டண மீட்டர் முறையாக இருக்கிறதா? என்பதை வாகனங்களுக்கு தகுதிச்சான்று வழங்கும் போது உறுதி செய்ய அறிவுறுத்தினர்.
ஷேர் ஆட்டோக்கள் மினி பேருந்துகள் போலவும், மினி பேருந்துகள் பேருந்து போலவும் பயணிகளை ஏற்றிச் செல்வதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். மனுதாரரின் புகார் மீது நடவடிக்கை எடுக்கவும், விதிப்படி நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது என்பதை உறுதி செய்யவும் மதுரை மாவட்ட மற்றும் மாநகர் வட்டார போக்குக்வரத்து அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.