வைகை அணையில் திறக்கப்பட்ட உபரிநீர் மதுரை வந்தடைந்ததை அடுத்து ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முழுக் கொள்ளளவை எட்டியதால் பாதுகாப்பு கருதி வைகை அணைக்கு வரும் நீர் முழுவதும் அப்படியே ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இந்த நிலையில், வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் மதுரை யானைகள் பாலம் அருகே வந்தடைந்துள்ளது.
இதனால், வைகை ஆற்றங்கரையோரம் வசிப்போர் பாதுகாப்பாக இருக்குமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்படுகிறது.