திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த உயர் மின்கம்பியை மிதித்து மாடு துடிதுடித்ததால், காப்பாற்ற முயன்ற விவசாயி மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மலையம்பட்டு கிராமத்தை சேர்ந்த பெருமாள் என்ற விவசாயி, தனது மனைவி தேவகியுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், ஏரியின் அருகே மேய்ந்துக்கொண்டிருந்த தனது பசுமாடு விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த உயர் மின்கம்பியை மிதித்து துடித்துள்ளது.
இதனை கண்டு மாட்டை காப்பாற்ற முயன்றபோது பெருமாள் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.