9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறப்பது பற்றி ஆலோசித்து வருவதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை முகப்பேரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்து வரும் நிலையில், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். ஆசிரியர் தகுதி தேர்வில் சில குழப்பங்கள உள்ளன என்றும், அதில் மாற்றம் கொண்டு வரப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.
முன்னதாக, சென்னை முகப்பேர் அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் "உயிர்கோள அடர் வனம்" திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் ஆயிரமாவது மரக்கன்றை நட்டார். மாணவர்களின் விளையாட்டு சாகசங்களை பார்வையிட்டு, திருவள்ளுவர் சிலைக்கும், அப்துல்கலாம் நினைவு நாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கும் அமைச்சர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.