சேலம் அரசு மருத்துவமனையில் 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் கொள்கலன் நிறுவும் பணி தொடங்கியது.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்றின் போது சுவாசப் பிரச்சனை உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஏற்கனவே 48 ஆயிரம் லிட்டர் கொண்ட ஆக்சிஜன் கொள்கலன் அமைக்கப்பட்டு, ஆயிரத்து 600 நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டது.
இந்நிலையில் எதிர்வரும் மூன்றாவது கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவமனை நிர்வாகம், ரோட்டரி கிளப் ஆஃப் சேலம் ஆகியோர் இணைந்து 6 ஆயிரம் லிட்டர் கொண்ட ஆக்சிஜன் கொள்கலன் அமைக்கும் பணி தற்போது துவங்கி உள்ளது.
இந்த பணி இன்னும் ஒரு சில நாட்களில் நிறைவு பெற்றவுடன் இதன் மூலம் மகப்பேறு மற்றும் குழந்தைகள் வார்டு பகுதியில் 800 நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதி அளிக்கப்பட உள்ளது.