டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள தமிழக வீராங்கனைகள் தனலட்சுமி மற்றும் சுபா வெங்கடேசன் ஆகியோருக்கு முதலமைச்சர் அரசு பணி வழங்கவுள்ளார் என விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் 4 இடங்களில் ஒலிம்பிக் அகாடமி தொடங்கப்பட்டு, சர்வதேச அளவில் தமிழக வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.