செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மென்பொறியாளருக்கு கொரோனா; 18வது மாடியில் இருந்து குதித்த மனைவி பலி...! குடும்பம் சிதைந்த கொடுமை

Jul 25, 2021 05:47:45 PM

மலேசியாவில் குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மென்பொறியாளர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த நிலையில், கொரோனா பாதிப்புக்குள்ளாகி உதவிக்கு ஆள் இன்றி தவித்த மென்பொறியாளரின் மனைவி, தனது  5வயது மகளுடன், 18 ஆவது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது

கடலூர் மாவட்டம், திட்டக்குடியை சேர்ந்தவர் 40 வயதான மென்பொறியாளர் ரவிராஜா. இவரது மனைவி சத்யாபாய் இவர்களுக்கு 5 வயதில் மகள் இருந்தார். ரவிராஜா தனது குடும்பத்துடன் மலேசிய தலை நகர் கோலாலம்பூர் பகுதியில் உள்ள தாமான் தெனகாசாலாக் செலத்தானில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 18 வது மாடியில் குடியிருந்து வந்தனர். கணவன் மனைவி இருவரும் மென்பொறியாளராக பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த 14 ந்தேதி ரவிராஜா, கொரோனா பெருந்தொற்றுக்குள்ளாகி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மனைவி சத்யாபாய்க்கும், மகளுக்கும் கடந்த 16ந்தேதி கொரோனா உறுதியானது. கடந்த 17 ந்தேதி கடுமையான மூச்சுத்திணறலுடன் அவதிப்பட்டு வந்த சத்யா பாய், உறவினர்களை தொடர்பு கொண்டு தங்களை கவனித்துக் கொள்ளவோ தங்களுக்கு உதவவோ, ஆளில்லாமல் அவதிப்படுவதாக தெரிவித்துள்ளார்.

கணவன் மருத்துவமனையில் உயிருக்கு போராடும் நிலையில், கடுமையான மன உளைச்சளுக்குள்ளான சத்யாபாய், தனது 5 வயது மகளுடன் தான் வசித்து வந்த 18 வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார் . இதில் சம்பவ இடத்திலேயே தாயும் மகளும் பலியானதாக கூறப்படுகிறது.

இந்த தகவலை கேட்டு உறவினர்கள் கதறிய நிலையில் , ரவிராஜாவும் சிகிச்சை பலன்றி சனிக்கிழமை மாலையில் உயிரிழந்ததால் கொரோனாவின் கோர முகத்திற்கு தமிழ் குடும்பமே பலியான சோகம் நிகழ்ந்துள்ளது. ரவிராஜா உயிரிழந்த தகவல் அறிந்து அவரது உறவினர்கள் கதறி அழுதனர்

தங்கள் வீட்டு பிள்ளைகளின் உயிரிழப்பால் அதிர்ச்சி அடைந்துள்ள உறவினர்கள் , தங்கள் மகன் மருமகள் மற்றும் பேத்திக்கு இறுதி சடங்குகள் செய்ய அஸ்தியையாவது தமிழகம் கொண்டு வர மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழக மென்பொறியாளரின் குடும்பத்திற்கு உரிய சிகிச்சைக்கான உதவியோ அல்லது தேவையான மன நல ஆலோசனையோ வழங்கப்பட்டிருந்தால் இந்த விபரீத உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்காது என்பதே உறவினர்களின் ஆதங்கமாக உள்ளது.

 


Advertisement
மாற்றுப் பயிர் சாகுபடிக்கு மகத்தான சாய்ஸ் டிராகன் பழ சாகுபடியில் லாபமீட்டும் விவசாயிகள் மாற்று சாகுபடிக்கு ஏற்ற பயிர்!
திருச்செந்தூர் முருகன் கோவில் கந்தசஷ்டி தங்கத்தேர்பவனி விழா
திருச்சியில் அளவுக்கு அதிகமாக லோடு ஏற்றி வந்த லாரி பாரம் தாங்காமல் கவிழ்ந்து விபத்து
கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்த தலைமைச் செயலாளர்
காட்டுக்குள் பதுங்கி பெண்கள் வேட்டை காமுகன் கால் உடைந்தது..! சீரியல் ரேப்பிஸ்ட் சிக்கியது எப்படி ?
திருப்பூரில் கால்நடை மருந்தகத்தில் மோதலை தொடர்ந்து இருதரப்பினர் மீது வழக்குப்பதிவு
கல்லூரி பேருந்து சாலையோர மரத்தில் மோதி விபத்து ..
தேனீக்கள் வளர்ப்பது இவ்வளவு சுலபமா..? மாதம் ரூ.50 ஆயிரம் லாபம்..! ஒரு நாள் பயிற்சி தர்ராங்க..
மூடப்படாத குடிநீர் பைப் பள்ளம் - விபத்தில் சிக்கி பச்சிளம் குழந்தை உயிரிழப்பு.
கை கொடுக்கும் காளான் வளர்ப்பு.. வாய்ப்பை வழங்கும் வேளாண் பல்கலை..

Advertisement
Posted Nov 06, 2024 in தமிழ்நாடு,Big Stories,

மாற்றுப் பயிர் சாகுபடிக்கு மகத்தான சாய்ஸ் டிராகன் பழ சாகுபடியில் லாபமீட்டும் விவசாயிகள் மாற்று சாகுபடிக்கு ஏற்ற பயிர்!

Posted Nov 06, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

காட்டுக்குள் பதுங்கி பெண்கள் வேட்டை காமுகன் கால் உடைந்தது..! சீரியல் ரேப்பிஸ்ட் சிக்கியது எப்படி ?

Posted Nov 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தேனீக்கள் வளர்ப்பது இவ்வளவு சுலபமா..? மாதம் ரூ.50 ஆயிரம் லாபம்..! ஒரு நாள் பயிற்சி தர்ராங்க..

Posted Nov 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கை கொடுக்கும் காளான் வளர்ப்பு.. வாய்ப்பை வழங்கும் வேளாண் பல்கலை..

Posted Nov 05, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

50 கிராம் நகைக்காக மூதாட்டியை கொன்று டிராலியில் அடைத்த குடும்பம்..! நெல்லூர் டூ மீஞ்சூர் ரெயில் திகில்..


Advertisement