தேனி அருகே பிரியாணி கடை ஊழியரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.
சின்னமனூரைச் சேர்ந்த யூசுப் இஸ்லாம் என்ற அந்த இளைஞரின் வீட்டில் சுமார் 5 மணி நேரம் நடந்த விசாரணையில் சிம்கார்டுகள், பென்டிரைவுகள், லேப்டாப்புகள், மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
விசாரணை முடிந்து வெளியே வந்த அதிகாரிகளை முற்றுகையிட்ட அப்பகுதியினர் சிலர், அவர்கள் வைத்திருந்த ஆவணங்களைக் கேட்டு வாக்குவாதம் செய்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் மதுரையில் கைதான அப்துல்லா என்பவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த சோதனையும், விசாரணையும் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.