நீர் ஆதாரங்களை அதிகரிக்க புதிய நீர்நிலைகளை உருவாக்கிடவும், அணைகள் இல்லா மாவட்டங்களில் தடுப்பணை உள்ளிட்ட புதிய நீர் சேமிப்பு கட்டுமானங்களை அமைத்திடவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறையின் செயல்பாடுகள், திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர், அத்திக்கடவு - அவிநாசி திட்டம், டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள், மேட்டூர் சரபங்கா நீரேற்று திட்டம் உள்ளிட்டவற்றின் நிலைகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தின் நிலை குறித்தும் ஆய்வு செய்த முதலமைச்சர், விவசாயிகள் நலன் கருதி சீரமைக்கப்படாமல் இருக்கும் நீர்நிலைகள், கால்வாய்களை முன்னுரிமை வழங்கி புனரமைக்கவும் அறிவுறுத்தினார்.