கோவை மாவட்டம், வால்பாறையில் சோலையாறு அணை நிரம்பியதை அடுத்து 3 மதகுகள் வழியே தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தொடர் மழை காரணமாக, வால்பாறை மலைப் பகுதியில் அருவிகள் மற்றும் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆங்காங்கே சிறுசிறு நீர்வீழ்ச்சிகளும் ஏற்பட்டுள்ளன.
வெள்ளமலை டனல், இறைச்சிப்பாறை, சின்னக்கல்லாறு போன்ற பகுதிகளில் பகுதிகளில் அருவிகள் ஆர்ப்பரிக்கின்றன.
அக்காமலை, கருமலை, சின்னக்கல்லாறு, சோலையாறு அணை, அட்டகட்டி ஆகிய பகுகளில் கனமழை பெய்துவருதால் நடுமலை ஆறு, வாழைத்தோட்ட ஆறு, கூலாங்கல் ஆறுகளில் நீர்வரத்து அதிகமாக உள்ளது.
சோலையாறு அணை முழுக்கொள்ளளவை எட்டியதை அடுத்து, மூன்று மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது.
அணையை சுற்றியுள்ள பொதுமக்களுக்கு பாதுக்காப்பாக இருக்குமாறும், கரையோர மக்கள் அணைக்கு சென்று குளிப்பது, துணிவைப்பதை தவிர்க்குமாறும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.