ஈரோடு மாவட்டம் பவானியில் தடையை மீறி பான் மசாலா மற்றும் குட்கா விற்ற மளிகை கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
ஜம்பையில் ஒரு மளிகைக்கடையில் 100 பாக்கெட் குட்கா இருந்தது போலீசார் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த கடைக்காரர் தான் மட்டும் விற்கவில்லை என்று கூறி, வேறு எங்கு எங்கு விற்கிறார்கள் என்கிற தகவல்களை அளித்ததன் பேரில் பவானியை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கடைகளில் போலீசார், வருவாய்த்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
சோதனை முடிவில் 500 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பாக்கெட்டுகளை கைப்பற்றிய அதிகாரிகள், அவற்றை கள்ளத்தனமாக விற்ற 7 மளிகை கடைகளுக்கு சீல் வைத்ததோடு, அந்த கடைகள் 30 நாட்கள் வரை திறக்க அதிரடியாக தடை விதித்தனர்.
5 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.