ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ள நிலையில், ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளான வட கேரளா, நீலகிரியில் பெய்து வரும் தொடர் கனமழையால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 19ஆயிரம் கன அடி வீதமாக அதிகரித்துள்ளது.
அத்தோடு பில்லூர் அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரும் பவானி சாகர் அணைக்கு வருவதால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
105 அடி மொத்த உயரம் கொண்ட பவானிசாகரின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 99 அடியாக உள்ளது. நீர்மட்டம் 102 அடியானதும் பவானிசாகர் அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்படும் என்பதால், ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.