இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை வீணடிக்காமல் கூடுதலாக செலுத்திய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கிய போது பல்வேறு மாநிலங்கள் ஆயிரக்கணக்கான டோஸ்கள் தடுப்பூசியை வீணடித்ததாக மத்திய அரசு கூறியிருந்தது.
இந்நிலையில் தற்போது அதற்கு நேர்மாறாக தடுப்பூசியை வீணடிக்காமல் கூடுதலாகச் செலுத்தியதில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
தற்போதைய கணக்கீட்டின்படி 5 லட்சத்து 88 ஆயிரத்து 243 டோஸ்கள் தமிழ்நாடு கூடுதலாகச் செலுத்தியுள்ளது.
இதற்கு அடுத்த இடத்தில் 4 லட்சத்து 87 ஆயிரம் டோஸ்களுடன் மேற்கு வங்கம் 2ம் இடத்திலும், 4 லட்சத்து 62 ஆயிரம் டோஸ்கள் கூடுதலாகச் செலுத்தி குஜராத் 3ம் இடத்தையும் பிடித்துள்ளன.