நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் பா.ஜ.க. முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா திருமயம் நீதிமன்றத்தில் ஆஜராகினார்.கடந்த 2018ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தை அவதூறாக பேசியதாக ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் ஹெச்.ராஜா மீதான குற்றப்பத்திரிகை திருமயம் போலீசாரால் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையில், இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ஹெச். ராஜா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
ஆனால், முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், ஹெச்.ராஜாவை திருமயம் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டிருந்தனர். அதன்படி திருமயம் நீதிமன்றத்தில் ஹெச்.ராஜா ஆஜரானார். வழக்கு விசாரணை செப்டம்பர் 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.