கன்னியாகுமரி வழியாக கேரளாவுக்கு மணல் உள்ளிட்டவற்றை கடத்திச் சென்றதாக 11 டிப்பர் லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
கேரளாவில் நடக்கும் சாலை பணிகள் மற்றும் விழிஞ்சம் துறைமுகம் பணிகளுக்காக தினந்தோறும் 50 டிப்பர் லாரிகளில் பாறைப் பொடி, ராட்சத கற்கள், எம் சாண்ட், ஜல்லி உள்ளிட்ட பொருட்களை தமிழகத்தில் இருந்து கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த அனுமதியை தவறாக பயன்படுத்தி தினந்தோறும் 500 முதல் 600 டிப்பர் லாரிகளில் மணல் உள்ளிட்ட பொருட்கள் கடத்திச் செல்லப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும் 15 டன் ஏற்றவேண்டிய டிப்பர் லாரிகளில் 30 டன் வரையும், 25 டன் ஏற்ற வேண்டிய டிப்பர் லாரியில் 50 டன்னும் என கூடுதலாக பாரம் ஏற்றிச் செல்வதால் தேசிய நெடுஞ்சாலைகள் சேதமாவதாக புகார் எழுந்தது.
கடந்த 2 மாதத்தில் மட்டும் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகளிடம் இருந்து 40லட்சம் ரூபாய் வரை அபராதமாக வசூலிக்கப்பட்ட நிலையிலும் கூடுதல் பாரம் ஏற்றிச் செல்வது தொடர்ந்ததால் 11 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.