ஆர்.எஸ்.எஸ் தலைவர் வருகைக்கான ஏற்பாடு குறித்த சுற்றறிக்கை அனுப்பிய மதுரை மாநகராட்சி அதிகாரி பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
மதுரையில் நடைபெறும் நான்கு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன்பகவத் வருகை தரவுள்ள நிலையில், சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகம் உத்தரவிட்டிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அரசின் எந்த விதிகளின் படி இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என எம்.பி. வெங்கடேசனும் கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில் “ இசட் பிளஸ் ' பாதுகாப்பில் இருக்கும் பிரமுகர்கள் பயணம் செய்யும்போது பாதுகாப்பு விதிகளின்படி வழக்கமாக செய்யப்படும் சில முன்னேற்பாடுகள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன என்றும் சிறப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை என்றும் மதுரை மாநகராட்சி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
அதே நேரம் அந்த சுற்றறிக்கையை வெளியிட்ட உதவி ஆணையர் சண்முகத்தையும் அந்தப் பொறுப்பில் இருந்து மாநகராட்சி நிர்வாகம் விடுவித்துள்ளது.