மதுரையில் பழைய 5 பைசாவுக்கு பிரியாணி வழங்கப்படுமென என்ற அறிவிப்பால், புதிதாக திறக்கப்பட்ட கடையில் தனி மனித இடைவெளியின்றி ஏராளமானோர் குவிந்தனர்.
அங்குள்ள செல்லூர் பகுதியில், 5 பைசாவுக்கு இலவச பிரியாணி என அங்காங்கே போஸ்டர் ஒட்டப்பட்டதால் பழைய 5 பைசாவுடன் கடை முன் ஏராளமானோர் கூடி சிறியவர் முதல் பெரியவர் வரை மகிழ்ச்சியுடன் பார்சல்களை வாங்கி சென்றதுடன், சாலையின் அருகே இக்கடை உள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
கடை முன் அதிகளவில் மக்கள் கூடி தள்ளு, முள்ளு ஏற்பட்டதோடு திறந்த முதல் நாளே கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் உரிமையாளர் கடையின் ஷட்டரை இழுத்து மூடினார்.