நாமக்கல் மாவட்டம் முள்ளுக்குறிச்சியில் செல்போன் சிக்னல் கிடைக்காததால் அபாயகரமான முறையில் நீர்த்தேக்கத் தொட்டி மீது ஏறி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்று வருகின்றனர்.
முள்ளுக்குறிச்சி, ஊனந்தாங்கல், வரகூர்கோம்பை, கரியாம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் செல்போன் டவர் இல்லாததால் முறையாக சிக்னல் கிடைப்பதில்லை என கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் தினந்தோறும் ஆபத்தான நிலையில் நீர்தேக்கத் தொட்டி மீது ஏறி ஆன்லைன் வகுப்பில் பயின்று வருவதால் செல்போன் டவர் அமைத்து தர வேண்டும் என ஊர்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல், ஏற்கனவே நாமகிரிப்பேட்டையில் செல்போன் சிக்னல் இல்லாததால் மாணவர்கள் மரத்தின் அமர்ந்து ஆன்லைன் வகுப்பு பயின்றது குறிப்பிடத்தக்கது.