செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

தெற்காசியாவிலேயே தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை ஆக்குவதே இலட்சியம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Jul 20, 2021 05:00:18 PM

தெற்காசியாவிலேயே தொழில் தொடங்க உகந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை ஆக்குவதும், 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியை எட்டுவதுமே தமது அரசின் இலக்கு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் தொழில்துறை சார்பில் முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்கிற விழா நடைபெற்றது. இதில் 17 ஆயிரத்து 141 கோடி ரூபாய் முதலீட்டில் 55 ஆயிரத்து 54 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் JSW Renew Energy, ZF Wabco, Capita Land, Srivaru Motors, TCS மூன்றாம் கட்டம் உள்ளிட்ட 35 தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.

நாலாயிரத்து 250 கோடி ரூபாய் முதலீட்டில் 21 ஆயிரத்து 630 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் AG&P Pratham, TCS இரண்டாம் கட்டம் உள்ளிட்ட 9 தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

 

ஏழாயிரத்து 117 கோடி ரூபாய் முதலீட்டில் ஆறாயிரத்து 798 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் விக்ரம் சோலார், இன்டக்கிரேட்டட் சென்னை பிசினஸ் பார்க், இஎஸ்ஆர் அட்வைசர்ஸ் உள்ளிட்ட 5 திட்டங்களின் வணிக உற்பத்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

 

தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் ஒற்றைச் சாளர இணையத்தளத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். புதிய முதலீட்டாளர்களுக்கு உதவும் வகையில் வணிகம் புரிதலுக்குத் தேவையான நூற்றுக்கு மேற்பட்ட சேவைகள் இந்த இணையத்தளத்தில் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.

 

தமிழ்நாட்டில் செயல்படும் 5 புத்தொழில் நிறுவனங்களுக்கு மானியம் வழங்குவதற்கான உத்தரவுகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியை எட்டுவதே தமது அரசின் இலக்கு எனத் தெரிவித்தார்.

 

நிகழ்ச்சியில் பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, உணவு பதப்படுத்தல், தகவல் சேமிப்பு, காற்றாலை மின் உற்பத்தி, மின் வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில் துறைகளில் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்தார்.


Advertisement
குற்றச் செயல்களில் உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்கிறது - அமைச்சர் சேகர் பாபு
போக்ஸோ வழக்கில் முன்னாள் ராணுவ வீரருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை
இயக்குநர் பா.ரஞ்சித், கானா இசைவாணி மீது புகார்
வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்பட்டு 4 வயது குழந்தை உயிரிழப்பு
ஆந்திர மாநில பக்தர்கள் வந்திருந்த பேருந்தில் ஏறி திருட முயற்சி... போலீசில் பிடித்துக் கொடுத்த பொதுமக்கள்
அமைச்சர் பெரியகருப்பன் மீதான தேர்தல் தகராறு வழக்கை ரத்து செய்தது ஐகோர்ட்
15 இரும்பு சத்து மாத்திரைகளை ஒரே நேரத்தில் உண்ட பள்ளி மாணவன்
கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் வழக்கறிஞர்கள் சாலை மறியல்
காரைக்குடி விமான நிலையத்தை பயன்பாட்டுக்குக் கொண்டுவரக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்த மதுரை உயர்நீதிமன்றம்
நெல்லை அ.தி.மு.க நிர்வாகிகளின் ஆதரவாளர்களிடையே கைகலப்பு

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement