கொரோனா 3ம் அலையை எதிர்கொள்ள 1000 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மற்றும் 80 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கைகள் தயாராக உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைகாக தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் அதற்கான மருந்துகளும் தயாராக உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தனியார் மருத்துவமனைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் 25 விழுக்காடு தடுப்பூசிகளில், 10 விழுக்காடு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், எனவே பொதுமக்களுக்கு தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக தடுப்பூசி செலுத்தி, அதற்கான தொகையை தொண்டு நிறுவனங்கள் மூலம் பெறுவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறினார்.