பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிவசங்கர் பாபா மீது பதியப்பட்ட 3 வழக்குகளுக்கு 30 பேர் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது.
சிவசங்கர் பாபா மீது 3 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிற நிலையில், இரு வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மூன்றாவது வழக்கிலும் சிவசங்கர் பாபாவை கைது செய்ய தீவிரம் காட்டி வரும் சிபிசிஐடி, அவருக்கு எதிராக வலுவான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளது.
இதற்காக ஒவ்வொரு போக்சோ வழக்கிற்கும் தலா 10 பேர் சாட்சிகள் என புகார் கொடுத்த மாணவிகளுடன் பயின்ற முன்னாள் மாணவிகளும் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் விசாரணை நடத்தி வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிசிஐடி முடிவு செய்துள்ளது.