சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த கீழடி மற்றும் அகரத்தில் 7-ஆம் கட்ட அகழாய்வின் போது உறை கிணறு மற்றும் சுடுமண் பெண் பொம்மை கிடைத்து உள்ளது.
கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளில் 6 மாதமாக 7-ஆம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. கீழடியில் 7 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடந்து வரு நிலையில் அங்கு மேலும் ஒரு உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட உறை கிணறு விளிம்பில் அலங்கரிப்புடன் 58 சென்டி மீட்டர் விட்டம், 3 சென்டி மீட்டர் தடிமன் கொண்டு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் அகரத்திலும் சுடுமண் பெண் பொம்மை மற்றும் உடைந்த நிலையில் உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக ஆகழாராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.