தமிழகத்தின் எல்லையோர மாவட்டத்தில் இருந்து பிடிக்கப்பட்ட 85 கொசுக்களின் உடலில் ஜிகா வைரஸ் இல்லை என்பது சுகாதாரத்துறையினர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கேரள மாநிலத்தில் ஏடிஸ் கொசுக்கள் மூலம் ஜிகா வைரஸ், டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் பரவிவரும் நிலையில், தமிழக எல்லையோர மாவட்டங்களான தென்காசி, தேனி, கோவை, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் பிடிக்கப்பட்ட 85 கொசுக்களுக்கு ஜிகா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. அவற்றின் உடலில் ஜிகா வைரஸ் இல்லை என்பது உறுதியானது.