12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் சில தினங்களில் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிகள் திறப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடுவது குறித்து தமிழக முதல்வரிடம் ஆலோசிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் முறையாக நடத்தப்பட்டதா என்பது குறித்து நாளைய தினம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் ஆலோசிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.