திருச்சியில் பா.ஜ.க. தலைவராக பொறுப்பேற்கும் அண்ணாமலைக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், பட்டாசு வெடிக்க போலீசார் அனுமதிக்காதால், பா.ஜ.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு உருவானது.
கரூரில் இருந்து சென்னைக்கு சாலை மார்க்கமாக வரும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு திருச்சியில் வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது,பட்டாசு வெடிக்க போலீசார் அனுமதிக்கவில்லை எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் தடையை மீறி பட்டாசு வெடித்தனர்.
இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு உருவானது. இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, இஸ்லாமியர்களை பிரித்தாளும் முயற்சியாகவே பொது சிவில் சட்டம் இஸ்லாம் மதத்திற்கு எதிரானது என்று சில அரசியல் கட்சிகள் கருத்தை பரப்புவதாக குற்றஞ்சாட்டினார்.