டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவிருகும் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் காணொளி காட்சி மூலம் உரையாடினார்.
தடகள வீரர், வீராங்கனைகளான ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன், தனலட்சுமி சேகர், ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த அவர், வறுமையின் பிடியில் இருந்த போதும் சாதனையாளர்களாக திகழும் தாங்களே உண்மையான உலக நாயகர்கள் என தெரிவித்தார்.
போட்டியை நிதானமாகவும் பதற்றமின்றியும் எதிர்கொள்ள வேண்டுமெனவும் கமல்ஹாசன் அறிவுறுத்தினார்.